Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வார்டில் சுற்றித் திரியும் எலிகளால் நோயாளிகள் அச்சம்..! (வீடியோ இணைப்பு)

திருச்சி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள்
வருகை தந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் எலி தொல்லை அதிகளவு இருப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்றைய தினம் (ஜூலை 23) அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி ஒருவரின் கால் கட்டை விரலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறிய நிலையில், இன்று ஐசியு வார்டில் எலிகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்