திண்டுக்கல் மாவட்டம்.ஆத்தூர் அய்யன் கோட்டையை சேர்ந்தவர் சுப்புராமன். இவரது மகள் கார்த்திகாயினி ( வயது 32). எம்.இ.பட்டதாரியான இவருக்கு, அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் வரன் பார்த்து உள்ளனர். அதேபோல், திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் (38). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தான் மத்திய அரசு பணியில் வேலை பார்த்து வருவதாக, கார்த்திகாயினி கூறியுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கடந்த 6 மாதமாக பழகி வந்துள்ளனா். இந்த நிலையில் கார்த்திகாயினி மத்திய அரசு பணியில் இல்லை என்பது ரமேஷுக்கு தெரியவந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேஷிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். ரமேஷ் அதற்கு மறுத்ததோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 100 பவுன் நகை மற்றும் கார் வேண்டும் என கூறியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கார்த்திகாயினி சென்னை எக்மோர் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தார். இதனையடுத்து ரமேஷின் நண்பர் கடந்த 13ம் தேதி காட்டூரில் உள்ள ரமேஷின் வீட்டில், அவர்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கார்த்திகாயினியை ரமேஷ் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்திகாயினி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருவெறும்பூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததோடு ரமேஷை கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய, சிறையில் அடைத்தனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.