முசிறியில் அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதல்….(வீடியோ இணைப்பு)
உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு....
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் துறையூரை சேர்ந்தவர் நடேசன் (வயது 58). இவர், முசிறி கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி எடுக்கப்பட்ட தனியார் பஸ் ஒன்று அரசு பஸ் மீது மோதியது. இதில், அரசு பஸ் முன்புறம் சேதம் அடைந்தது. மேலும், அந்த தனியார் பஸ் டிரைவர் கீழே இறங்கி வந்து அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பஸ் உரிமையாளர் கைலாசம் மற்றும் சீவம்பட்டியைச் சேர்ந்த ராஜலிங்கம்( 27), வடக்கு சொரியம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் (45) ஆகியோர் மீது முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.