கடந்த ஆட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்திற்கு ‘முதல்வர் காலை உணவு திட்டம்’ என பெயர் வைக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் இந்த காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றும், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்
என்றும் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயரை “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்” என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘விடியல் மகளிர் பயணம்’ என்பது மகளிர் பயணம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.