Rock Fort Times
Online News

பிஷப் ஹீபர் கல்லூரியின் புதிய முதல்வராக பிரின்ஸி மெர்லின் நியமனம்

திருச்சி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரியின் புதிய முதல்வராக டாக்டர் பிரின்ஸி மெர்லின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி, தஞ்சை சி.எஸ்ஐ திருமண்டல பேராயரும், கல்லூரி தலைவருமான டாக்டர் டி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த டாக்டர் பிரின்ஸி மெர்லின் 2006ம் ஆண்டு பேராசிரியராக பணி உயர்த்தப்பட்டு திறம்பட செயல்பட்டார். இதன் காரணமாக 2020ம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரியின் ஐ.கே.சி டீன் பொறுப்பு இவரை தேடிவந்தது.

கடந்த மூன்று மாதங்களாகவே கல்லூரியின் பொறுப்பு முதல்வராக செயல்பட்டு வந்த டாக்டர் பிரின்ஸி மெர்லினுக்கு இன்று முறைப்படி கல்லூரியின் முதல்வர் பணி நியமண ஆணை பேராயர் டி.சந்திரசேகரன் திருக்கரங்களால் வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் புதிய முதல்வருக்கு சி.எஸ்.ஐ திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பிஷப் ஹீபர் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் பிரின்ஸி மெர்லின், திருச்சி சரக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்னீஸ் இளங்கோவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்