Rock Fort Times
Online News

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகை…!

இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில், 7-ம் கட்டத் தேர்தல் பரப்புரை மே 29-ம் தேதி முடிவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மே 30-ம் தேதி முதல் 3 நாள் பயணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றார். இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவும் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மே 30, 31 மற்றும் ஜுன் 1-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி வரும் மோடி கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபம் அல்லது அங்குள்ள தியானம் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் பின், ஜூன் 1ம் தேதி தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்