பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை…* திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உறுதி!
திருச்சி மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் குறை
தீர்க்கும் நாள் கூட்டம் இன்று(15.06.2026) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை அருகில் இருந்த அதிகாரிகளிடம் பிரித்துக் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் வீர் பிரதாப்சிங், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், துணை ஆணையர் சுல்தானா, நகரப் பொறியாளர் அண்ணாதுரை, நகர் நல அலுவலர் கார்த்திகேயன்
மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.