Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி:* மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இந்து மதத்தில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் நபர்களாக இருக்க வேண்டும். 14 வயதுக்கு மேற்பட்டவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
அவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும், ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தங்குமிடம், உணவு, உடை, பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதி அனைத்தும் திருக்கோவில் மூலமாக செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 08-06-2026 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் வருகிற 30-06-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620 006 என்ற முகவரிக்கு வருகிற 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரம் தேவைப்படுவோர் 94433 98769, 84288 25526, 95784 91124 என்ற செல்போன் எண்களில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்