திருச்சி மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்தில் நாளை(09.07.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால் பகுதி, பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, டி.டி.ரோடு, டாக்கர் ரோடு, கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள்நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், ஹெச்ஏபிபி, குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், நகரியம், திருச்சி செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.