Rock Fort Times
Online News

திருச்சி துவரங்குறிச்சி, அதவத்தூர் பகுதிகளில் நாளை “பவர் கட்”…!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (09.07.2024) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரை கோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுபட்டி, ஏ.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும்/காத்தலும், மணப்பாறை செயற்பொறியாளர் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதவத்தூர்

இதேபோல, அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடிக் குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்