Rock Fort Times
Online News

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.  அதேபோல திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள  நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜெயராம், துணை பதிவாளர் பொது விநியோக திட்டம் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம்,  மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) உதயகுமார், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்