கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உதவிய முதியவரை தாக்கி அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் மீது போலீசில் புகார்…!
திருச்சி மாவட்டம், லால்குடி தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையின் மூலம்
மீட்க உதவியதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் பஞ்சகரை அருகே வந்த சில மர்ம நபர்கள் தேவராஜனை வழிமறித்து தாக்கி, அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். அதோடு தேவராஜனை தாக்கியதை தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். முதியவர் மீதான தாக்குதல் குறித்து திருச்சி உத்தமர் கோயில் செயல் அலுவலரும், லால்குடி தண்டன்கோரை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் பொறுப்பாளருமான புனிதா அளித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், தண்டன்கோரை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும், அவருடைய கூட்டாளியான மற்றொருவரும் ஆக்கிரமிப்பு நிலம் காரணமாக தேவராஜனை தாக்கியது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.