தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் நேற்று( மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மயிலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வெங்கடேசன், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் நிரஞ்சன், நாம் தமிழர் கட்சியில் விஜய் விக்ரம் உள்பட 21 பேர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் 82,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் நிரஞ்சன் 52,312 வாக்குகள் பெற்று 2-வது இடமும், தே.மு.தி.க. வெங்கடேசன் 46,267, நா.த.க. விஜய்விக்ரம் 4.386 வாக்குகளும் பெற்றனர். இந்தநிலையில், மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன்மூலம், அதிக உறுப்பினர்களைக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Comments are closed.