Rock Fort Times
Online News

வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த விஜய்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல ராகுல் காந்தியும் விஜயை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து விஜய் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது: தவெக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு மிக்க நன்றி. மக்களின் நலனே தவெகவின் ஒரே குறிக்கோள். தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறோம். மாநில முன்னேற்றம், தமிழ்நாட்டு மக்கள் நலனில் முழு கவனமும் செலுத்துவோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்