திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு, போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநகரம் முழுவதும் அந்தந்த போலீஸ் சரகங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, தில்லைநகர் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன்,
ஹமீது என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம், கோட்டை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் ராமலிங்க நகர் பகுதியில் ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நூற்றுக்கணக்கான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஜெயச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.