7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ராய்கன்ஜ், பக்தாக், ராணாகாட் தக்ஷின், பக்தா, ஹிமாச்சல பிரதேசத்தின் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலாகார்க், உத்தரகண்டின் பத்ரிநாத், மங்லூர், பீஹாரின் ரூபாலி, பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு, ம.பி.,யின் அமர்வாரா, தமிழகத்தின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில், இண்டியா கூட்டணி 11 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. மே.வங்கத்தில் 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப் ஜலந்தர் மேற்கில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், ஹிமாச்சலில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் உத்தரகண்ட்டில் 2 தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளன. ம.பி.,யில் ஒரு தொககுதியில் பா.ஜ.,வும், பீஹாரில் ஒரு தொகுதியில் ஐக்கிய ஜனதா தளமும் முன்னிலையில் உள்ளன.
1
of 842
Comments are closed.