தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தர வரிசை பட்டியலை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் தர வரிசையில் திருச்சி மாநகராட்சி தமிழகத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதற்கான விருதினை
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த மாநகராட்சிக்கான விருதினை அமைச்சர் கே.என்.நேருவிடம் காண்பித்து ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று(13-01-2024) நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து திட்டத்திற்கும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தூய்மையான மாநகராட்சி விருது பெற்றதற்கு முக்கிய காரணமே குப்பை இல்லாத மாநகராட்சி என்று தேர்ந்தெடுக்கப்பட்டது தான். இன்னும் 3 மாதங்களில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். பேட்டியின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.