ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்…!
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு...!
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் சிறப்பு வாய்ந்தது என்றாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில், ஆடி அமாவாசை தினமான இன்று(04-08-2024) நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல, அதிகாலை 4 மணி முதலே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.
பின்னர் அவர்கள் புரோகிதர் உதவியுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு பொதுமக்கள் தலையில் தண்ணீர் எடுத்து தெளித்துக்கொண்டனர். சிலர் அங்குள்ள போர்வெல் தண்ணீரில் குளியல் போட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அம்மா மண்டபம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Comments are closed.