பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷுட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4–2 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா– கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி இன்று (04-08-2024) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டம் முடிவு வரை வேறு கோல் விழாததால் பெனால்டி ஷுட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரராக ஜொலித்தார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
Comments are closed.