பெரம்பலூர் – அரியலூர் – கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் லால்குடி அருகே ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனேவே இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது . மேலும் எங்கள் பகுதியில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் லால்குடி ரவுண்டாவில் ஒரு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.