Rock Fort Times
Online News

துறையூர் அருகே பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடியை சேர்ந்தவர் சிக்கன் வயது 70. விவசாயியான இவர் தனது மனைவி பத்மாவதி கடந்த ஒரு மாத காலமாக உடல்நலம் பாதிக்கப்பபட்டிருந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு மருந்தடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிக்கனை உறவினர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிக்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்