பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் ‘பிரமாண்ட ரோடு ஷோ’ அதாவது ‘மக்கள் தரிசனம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற 18ம் தேதி கோவையில் கவுண்டம்பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் வரை பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பாஜக தரப்பில் முன் அனுமதி கோரி மாநகர காவல் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.இந்த ரோடு ஷோவானது சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், ரோடு ஷோவின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். ஆலோசனையின்போது, ஏற்கனவே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதை மேற்கோள்காட்டி, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது. பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையாளர் கடிதம் அளித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.