திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளுக்கு அபராதம்…!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்றில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீஸ்காரர் ஒருவருக்கும், கண்டக்டர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அவர்களிடையே சுமுக உறவை ஏற்படுத்த மேல்மட்ட அளவில் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் தலா
500 ரூபாய் அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.