பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தேடப்படும் 5 நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் பரிசு…!
தஞ்சாவூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தேடப்படும் 5 நபர்கள் ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த 5 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம் 25 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
Comments are closed.