திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
தந்தை பெரியார் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் கே.வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், பொருளாளர் எஸ்.துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, குடமுருட்டி சேகர், மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கதிர்வேல், துர்கா தேவி, ஜெய நிர்மலா, ராமதாஸ், கலைச்செல்வி, சிந்தை பாலமுருகன், கார்த்திக், செந்தில், எம்.ஆர்.எஸ்.குமார், தஸ்தாபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.