Rock Fort Times
Online News

தாய்மாமன் தங்க மோதிரம் பெறத் தகுதிகள் என்ன? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…!

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ திட்டத்தை செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், ஜூன் 22 முதல் செப்டம்பர் 28 வரை நாளொன்றுக்கு 107 மையங்களில் தலா 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும், பிரசவத்திற்குப் பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது இந்தத் தங்கமோதிரம் வழங்கி கௌரவிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தாய்மார்கள் PICME-யில் பதிவு செய்யப்பட்டு ஆர்.சி.எச் (RCH) அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்