Rock Fort Times
Online News

சிறை கைதிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது, பள்ளி மாணவர்கள் சாப்பிட கூடாதா? * அமைச்சர் ராஜ்மோகன்..!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ செப்டம்பர் 22-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவார்கள். இது தொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று(18-09-2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மாணவர்களுக்கு தினமும் சலிப்பு தட்டாத வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலை உணவுத் திட்டத்தில் மேலும் பல புதிய உணவு வகைகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படுமா? என்று கேட்டதற்கு, “சிறைக் கைதிகள் வரை சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது, நாட்டைக் கட்டியெழுப்பப்போகும் பள்ளி மாணவர்கள் சாப்பிடக் கூடாதா? எனவே, எதிர்காலத்தில் மிகவும் சுகாதாரமான முறையில் தயாரித்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்