Rock Fort Times
Online News

பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற திருச்சியில் முகாம் நடத்தப்படுமா?* பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

இன்றைய நவீன உலகில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை நடந்தாலும் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் இன்னும் புழக்கத்தில் தான் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் கிழிந்தும், அழுக்கடைந்தும் காணப்படுகின்றன. இந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் அதிகம் கூடும் காந்தி மார்க்கெட், வாரச்சந்தை, பேருந்துகள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் மாற்றும்போது வாங்க மறுக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், 500 ரூபாய் நோட்டுகளுக்கு எங்குமே சில்லறை கிடைப்பதில்லை. செல்போன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை நடைபெறுவதால் பெரும்பாலான கடைகளில் 500 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பதே இல்லை. இதனாலும் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே
பழைய , கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள திருச்சியில் உள்ள வங்கிகளில் அதற்கான முகாம் நடத்த வேண்டும் என்றும், ஏடிஎம் மையங்களில் 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 200 ரூபாய் 100 ரூபாய் கிடைக்கும் வகையில் நிரப்ப வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்