பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(17-09-2026) பிறந்தநாள் ஆகும். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.