Rock Fort Times
Online News

பெண் பாலியல் புகார்: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..!

பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இவர், 2024-ம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தேசிய தலைமையிடம் புகார் அளித்திருந்தார்.மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனது பொறுப்பிலுள்ள குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் பாதுகாவலராகப் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாகவும்   தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு
எம்.முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்