Rock Fort Times
Online News

திருச்சி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து 20க்கும் மேற்பட்டோர் காயம்…

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் மினி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்றது. பேருந்தை நாகம்மா நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வாலிஸ்புரம் அருகே சென்ற போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலருக்கு காயம்படு காயங்கள் ஏற்பட்டது. ஈடுபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் கூச்சலிட்டனர் இதை எடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ஈடுபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டதோடு 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சுமார் 20க்கும் காயம் அடைந்து 108 வாகனங்கள் மூலம் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்