திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து.இவரது மகன் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பானி பூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் பானிபூரி கடைக்கு மேலே ப்ளாஸ்டிக் சீட் அமைக்க முடிவு செய்து அதை எடுத்து வருவதற்க்காக பைக்கில் பளூர் வந்துள்ளார்.பின்னர் பிளாஸ்டிக் சீட்டை எடுத்துக் கொண்டு பைபாஸ் ரோட்டை கடப்பதற்காக பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் பைக் மீது மோதியது.இதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ரமேஷை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.