பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் “தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 ஏக்கரில் மாதவரம் மெயின் ரோட்டில் இருந்தது. இதில் வீடு கட்டி விற்பனை செய்ய கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா என்பவரிடம் ஒப்பந்தம் போட்டோம். இந்த ஒப்பந்தத்தின்படி எங்கள் நிலத்தில் 234 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி அதில் 78 வீடுகள் எங்களுக்கும் மீதி உள்ள 156 வீடுகள் கட்டுமான நிறுவன உரிமையாளருக்கும் எடுத்துகொள்ளும்படி குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் எங்களுக்கு 48 வீடுகள் என்று போலியாக கட்டுமான நிறுவன உரிமையாளர் விற்பனை செய்து விட்டார். இதன் மூலம் ரூ. 43 கோடி மோசடி நடந்துள்ளது” என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாரை சேர்ந்த சந்தோஷ் ஷர்மா மற்றும் செனாய் நகரை சேர்ந்த எஸ். சாகர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இவர்கள் மீது ஏற்கனவே மோசடியில் ஈடுபட்டதாக மத்திய கூற்றப்பிரிவில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.