முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் திருச்சி மேல சிந்தாமணியில் மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா தலைமையில் நடந்தது. முகாமை மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கட்சியினர் பலர் ரத்ததானம் வழங்கினர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைசெயலாளர் கள் வனிதா, பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி ,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கலிலுல் ரகுமான், ஐ.டி. பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, சிறுபான்மை பிரிவு மீரான், கலை பிரிவு ஜான் எட்வர்டு, மீனவரணி அப்பாஸ், பகுதி கழக செயலாளர்கள் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, பூபதி, வெல்லமண்டி சண்முகம், கலைவாணன், அன்பழகன், சுரேஷ் குப்தா, எல்.கே.ஆர் ரோஜர், நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், சதர்,வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன்,நிர்வாகிகள் தர்கா காஜா, மலைக்கோட்டை ஜெகதீசன், சாத்தனூர் வாசு, வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், நத்தர்ஷா, அப்பாக்குட்டி, வெல்லமண்டி கன்னியப்பன், கல்லுக்குழி முருகன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.