நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன் 28ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்த நிலையில், மத்திய அரசு அளித்த உறுதியை ஏற்று 26 நாட்களுக்கு பிறகு தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “26 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை முடிக்கின்றேன். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், 65 எம்பிக்கள், என்னை நேரில் சந்தித்தும் அல்லது கடிதம் மூலமாகவும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களை கருத்தில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகள் பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்டது. அது என்ன நிபந்தனைகள் என்பது குறித்து தனியாக ஒரு காணொளியில் விரிவாக; விரைவாக விளக்க உள்ளேன். அதுவரை யாரும், எங்கும் எந்த வன்முறையையும் அனுமதிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.