Rock Fort Times
Online News

தொகுதி மக்களின் குறைகளை தெரிவிக்க புதிய செல்போன் எண்… முசிறி எம்.எல்.ஏ. விக்னேஷ் அறிமுகம்!

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான முசிறி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. எம். விக்னேஷ், தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவிக்க வசதியாக புதிய செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

“முசிறி தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க வசதியாக 72008 05577 என்ற செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணின் மூலம் உங்கள் பகுதியிலுள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நேரில் சந்திக்க விரும்புபவர்கள் தொட்டியத்தில் செயல்பட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரலாம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து தகவல் வழங்குவார்கள். இதற்காக தனிப்பட்ட பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சாலை, பாலம் உள்ளிட்ட நீண்டகால வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, முசிறி தொகுதி மக்கள் நம்பிக்கையுடன் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்