திருச்சி அரியமங்கலம் அக்ரஹார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி லதா. இவர் நேற்று முன்தினம் (04.10.2023 ) வீட்டிலிருந்து வெளியேறி திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றார். பின்னர் தனது மகன் ஸ்ருதீசிடம் கேரளா புறப்பட்டு செல்வதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். ஆனால் அவர் கேரளாவுக்கும் செல்லவில்லை வீட்டுக்கும் திரும்ப வரவில்லை . இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளோடு தண்டவாள பகுதியில் ரெயிலில் அடிபட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓடும் ரெயிலில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மாயமான மூதாட்டி ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.