மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.40 லட்சம் நிதி…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்..
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வட்டார வணிக வளமையம் மூலம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 80 பேருக்கு ரூ. 40 லட்சம் நிதியை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகம், மகளிர் திட்ட ஏ.பி.ஓ. நிர்மலாதேவி, டி.ஆர்.பி. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
பெண்கள் வருங்காலத்தில் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்ற இலக்கை விதைத்து, முயற்சி செய்ய வேண்டும் உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .மேலும் கலைஞர் தான், தருமபுரியில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை ஆரம்பித்தார். அதன் பிறகு தற்போதைய தமிழக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது பல லட்சக்கணக்கில் மகளிர்உதவி குழு எண்ணிக்கையை பெருக்கினார். தற்பொழுது சிறப்பு திட்டம் செயலாக்கும் என்பதை உதயநிதி தான் மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகிறார். அது உங்கள் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையாகும் .அரசு பல்வேறு உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
மேலும் காலை உணவு திட்டம் உங்களை கருத்தில் கொண்டு தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80 மகளிருக்கு ரூ. 40 லட்சம் கடன் உதவி வழங்கப்படுவதாகவும் ,சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் உங்களது தேவையை உணர்ந்து தான் என்பதை அறிந்து கொள்வதுடன் அதனை செயல்படுத்தும் அறிவு சார்ந்த விதமாக பெண்கள் இருக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் தமிழ்ச்செல்வி மகளிர் வட்டார இயக்குனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.