நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது . இதனையடுத்து பணப்புழக்கத்தை சமாளிக்கும் வகையில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பா் 30ம் தேதி வரை அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் என்றும், அதுவரை இந்த நோட்டுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், வங்கி கணக்கில் செலுத்தவும் அவகாசம் அளிக்கப்பட்டது . இந்த அவகாசம் அக்டோபா் 7ம் தேதி வரை அதை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் நாளையுடன் ( 07.10.2023 ) முடிவடையும் நிலையில் இதுவரை 87 சதவீத நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. இன்னும் 12000 கோடி மதிப்பு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.