Rock Fort Times
Online News

முரசொலிமாறன் நினைவு நாள்: அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்