வயநாடு இடைத்தேர்தல்: முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி சாதனை…! 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி
மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தலோடு வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர், காலியான வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தார் பிரியங்கா காந்தி.
:- பிரியங்கா காந்தி -காங்கிரஸ் – 6,22,338 (4 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி)
சத்யன்; சி.பி.ஐ – 2,11,407
நவ்யா: பா.ஜனதா- 1,09,939

Comments are closed.