வாக்களித்த பின்பு நடிகர் அஜித் அந்த ஒற்றை வார்த்தையை சொன்னாரா?- * பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மேலாளர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் காலை 6.55 மணிக்கு திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்து முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார்.
அஜித்தைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் புடைசூழ அஜித் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் No Need (தேவையில்லை) என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டபோது, ”அவர் சொன்னது சரிதான்” என்று பதிலளித்தார். இந்தநிலையில் மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக வந்த தகவல் வதந்தி எனவும், அதில் உண்மையில்லை எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். இதனால் இந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Comments are closed.