Rock Fort Times
Online News

நாமக்கல்லில் திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிய புதுமண தம்பதி…!

தேர்தல் நேரங்களில் மணக்கோலத்தில் வந்து புதுமணத் தம்பதிகள் வாக்களிப்பது, ஜனநாயகக் கடமையை வலியுறுத்தும் ஒரு உற்சாகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2026- சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல்லில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியர் என்.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளிக்கு வந்தனர். மணப்பெண் தீபிகாவிற்கு இங்கு வாக்கு உள்ள நிலையில் அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு கணவருடன் புறப்பட்டுச் சென்றார். விருந்தினர் உபசரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இடையே புதுமண தம்பதி மாலையும், கழுத்துமாக வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றிய சம்பவம் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டது. சமூக வலைதளங்களிலும் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்