எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியையும் திட்டங்களுக்கு செலவிடலாம்- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பேரவையில் இன்று (26-06-2024) அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இதற்கு முன்பு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் ரூ. 2 கோடியை மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ.1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்கு எம்.எல்.ஏ -க்கள் செலவிட வேண்டியிருந்தது. இனி ரூ.3 கோடி தொகுதி வளர்ச்சி நிதியையும் எம்.எல்.ஏ- க்கள் நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம். முன்னாள் எம்எல்ஏக்கள் உடல்நலத்திற்கு பணம் தேவை படுகிறது என்று தெரிவித்திருக்கிறேன். முதல்வர் அது குறித்து பேசிவிட்டு தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜி.எஸ்.டியையும் நீக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.
Comments are closed.