திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள தமிழ்ச் சங்கம் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எழு தமிழியக்க தலைவர் குமரசாமி தலைமை வகித்தார்.இதைத்தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:”தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கொடி உருவாக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக உள்ளது. இதேபோல் தமிழகத்திலும், பள்ளிக்கல்வியில் தமிழ் மொழிப்பாடம் அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.அனைத்து மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிகளிலும் திருவள்ளுவர் சிலை அமைத்து திருவள்ளுவர் தினத்தை ஒரு திருவிழாவாகக் கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திருச்சி தமிழ்ச் சங்க அமைச்சர் (பொறுப்பு) உதயகுமார், எழுதமிழ் இயக்க செயலாளர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.