திருச்சி மாவட்டம், தாளக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் 24 வயதான சுவேதா.இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் சுவேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் பெற்றோர்கள் யாரும் இல்லாத நேரத்தில், தனது அம்மாவின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.