Rock Fort Times
Online News

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!

சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறவுள்ளது. இதனால், தாம்பரம் வழியாக செல்லும் ரயில் சேவை ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மங்களூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியிலிருந்து புறப்பட்டு மங்களூர் சென்றடையும். எழும்பூரிலிருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக செல்வதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படவுள்ளன. தொடர்ந்து ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவையின் மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்