தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான கவுன்சிலிங் நாளை (ஜூலை 22) முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு
2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2024-2025) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா். இதையடுத்து இன்ஜினியரிங் மாணவா் சோ்க்கைக்கான கவுன்சிலிங் (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர். 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22-ஆம் தேதியும், பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25-ஆம் தேதியும் கவுன்சிலிங் தொடங்கவுள்ளது. அதேபோல, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1
of 842
Comments are closed.