தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் கமலஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான நிதியை நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். தற்போது நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளார். அதற்கான நிதியை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் ஆகியோரிடம் கமல் ஹாசன் வழங்கினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.