Rock Fort Times
Online News

விஜய் கட்சியில் விறுவிறுவென இணைந்த 22 லட்சம் பேர்-அரசியல் கட்சியினர் அதிர்ச்சி…!

பிரபல நடிகரான விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், த.வெ.க. போட்டியிடவில்லை என்றாலும் 2026 சட்டமன்றத் தேர்தலே அவரது இலக்காக உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சியை பெருமளவு வளர்த்து விட வேண்டும் என விரும்புகிறார். இதற்காக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயத்துள்ளார். அதற்கான செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் விறுவிறு என இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை சுமார் 22 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் சுமார் 15 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கையை அவர் எட்டிப் பிடித்துள்ளார். ஒரே நேரத்தில் பலர் அவரது செயலியில் இணைய முயன்றதால் அந்த இணையதளம் முடங்கியது. சற்று நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அவரது கட்சியில் உறுப்பினர்கள் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். இதனால், இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விஜய் கட்சியில் அதிகம் பேர் இணைந்து வருவது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்